உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

“கற்பொறியும் பாம்பும் கனலும் கடிகுரங்கும் விற்பொறியும் வேலும் விலக்கவும்- பொற்புடைய பாணி நடைப்புரவிப் பல்களிற்றார் சாத்தினார் ஏணி பலவும் எயில்.

ஏணிமிசை மயக்கம்:

241

மதிலின் மீது நன்கு பொருந்துமாறு அமைந்த ஏணியின் மீது ஏறி நின்று மதிலின் அகத்தோனும் புறத்தோனும் போர் செய்தல் ஏணி மிசை மயக்கம் என்னுந்துறையாம்

(எ.டு)

“பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொரு வருடன்றெழுந்த காலை-யிருவரு மண்ணொடு சார்த்தி மதில் சார்த்திய யேணி விண்ணொடு சார்த்தி விடும்"

ஏழகநிலை: -அ

எம் வேந்தன் ஆட்டுக்கடாமேல் ஏறி ஊர்ந்து விளையாடும் இளைஞனாயிருப்பினும் அரசாட்சித் துறையில் பெரியன் என்று ஓர் இள மன்னனின் சிறப்பைப் பாராட்டுவது ஏழக நிலை என்னும் துறையாம்(ஏழகம்=ஆடு)

(எ.டு)

“எம்மனை யாம் மகிழ ஏழகம் மேற்கொளினும் தம்மதில் தாழ்வீழ்த் திருக்குமே- தெம்முனையுள் மானொடு தோன்றி மறலுங்கால் ஏழகத் தானொடு நேராம் அரசு

ஏழகநிலை: -(ஆ)

99

புகழ் பொருந்திய உலகத்தின் கண் ஒரு மன்னன் தனது இளமையை எண்ணாமல் அரசுரிமை மேற்கொண்டு நடத்தலும் ஏழகநிலை என்னும் துறையாம்.

(6.6)

"வேண்டார் பெரியர் விறல்வேலோன் தானிளையன்

பூண்டான் பொழில்காவல் என்றுரையாம்-ஈண்டு