உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ்வளம்

4

எரிபரந்து எடுத்தல்:

இருவகைப் படையாளும் இருவகைப் பகைப் புலத்துப் பரந்துசென்று எரியை எடுத்துச் சுடுதல்.

(எ.டு)

“களிறு கடை இயதாட்” என்னும் புறப்பாட்டினுள் "எல்லையு மிரவு மெண்ணாய் பகைவ

ரூர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை யாகலின்

எருமை மறன்:

எருமை மறம் என்பது, தனது உடைந்த படைக் கண்ணே ஒரு படைத்தலைவன் சென்று நின்று, அங்ஙனங் கெடுத்த மாற்று வேந்தன் படைத்தலைவனை அவன் எதிர்கொண்டுநின்ற பின்னணியோடு தாங்கின கடாப் போலச் சிறக்கணித்து நிற்கும் தன்மையாம்.

(எ.டு)

“சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கா லேற்றெருமை போன்றா னிகல்வெய்யோன்-மாற்றான் படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத் திடைவருங்காற் பின்வருவார் யார்"

ஏம எருமை:

தும்பை மறவன் ஒருவன் பகைவர்

களிற்றின்மேல்

தன்வேலை எறிந்து பின்னர்த் தன் தோள் வலியானே வெற்றி கொண்டது ஏம எருமை என்னும் துறையாம்.

(எ.டு)

“மருப்புத்தோ ளாக மதர்விடையிற் சீறிச்

செருப்புகன்று செங்கண் மறவன்-நெருப்பிமையாக் கைக் கொண்ட எஃகங் கடுங்களிற்றின் மேற்போக்கி மெய்க்கொண்டான் பின்னரும் மீட்டு.'

ஏணிநிலை:

உழிஞை மறவர் நொச்சியாருடைய மதிலின்கண் ஏணி சாத்தியது ஏணி நிலை என்னும் துறையாம்.