உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

66

புறப்பொருள்

'அகத்தன ஆர்கழல் நோன்றாள் அரணின்

புறத்தன பேரெழில் திண்தோள்-உறத்தழீஇத் தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட வாட்குரிசில் வானுலகி னான்.’

எயிற்பாசி:

وو

239

உழிஞை மறவர் நொச்சியாரது மதிலிற் சாத்திய ஏணிமேல் ஏறியது எயிற்பாசி என்னும் துறையாம்.

(எ.டு)

66

சுடும ணெடுமதில் சுற்றிப் பிரியார் கடுமுர ணெஃகங் கழிய- அடுமுரண் ஆறினா ரன்றி அரவும் உடும்பும்போல் ஏறினார் ஏணி பலர்.

எயிற்போர்;

மதிலின் கண்ணின்று காவல் செய்யும் நொச்சி மறவரின் போர்த்திறத்தைப் பற்றிப் புகழ்ந்து கூறியது எயிற்போர் என்னுந் துறையாம்.

(61.6)

“மிகத்தாய செங்குருதி மேவரு மார்பின் உகத்தாம் உயங்கியக் கண்ணும்-அகத்தார் புறத்திடைப் போதந் தடல் புரிந்தார் பொங்கி மறத்திடை மானமேற் கொண்டு"

எயிற்கு இவர்தல்:

ஒரு காலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப் பகலுக்குள் அழிப்பேம் என்று கூறி அஃது அழித்தற்கு விருப்பங் கொள்ளல். (எ.டு)

"இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப்

பொற்றாரான் போனகங்கைக் கொள்ளானா-லெற்றாங்கொ லாறாத வெம்பசித்தீ யாறவுயிர் பருகி

மாறா மறலி வயிறு"