உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஊரின்கண் தோன்றிய காமப் பகுதி:

காதல் மிக்க ஆடவரும் மகளிரும் அழகு பொருந்தக் கூடும் ஊரைப் பாராட்டியது ஊரின் கண் தோன்றிய காமப் பகுதி என்னும் துறையாம்.

(எ.டு)

“ஊடிய ஊடல் அகல உளநெகிழ்ந்து

வாடிய மென்தோள் வளையொலிப்பக்- கூடியபின்

யாமநீ டாகென்ன யாழ்மொழியார் கைதொழூஉம் ஏமநீர்க் கச்சியெம் ஊர்.

ஊர்கொலை:

வெட்சி மறவர்கள் பகைவர் ஊரின்கண் தீ தவழும்படி தம்குதிரைகளை முடுக்கிப் பகைவரது அரண்களை அழித்தது, ஊர் கொலை என்னுந்துறையாம்.

(எ.டு)

“இகலே துணையா எரிதவழச் சீறிப் புகலே அரிதென்னார் புக்குப்- பகலே தொலைவிலார் வீழத் தொடுகழல் ஆர்ப்பக் கொலைவிலார் கொண்டார் குறும்பு.

ஊர்ச்செரு:

وو

உழிஞை மறவரால் புகுதற்கரிய காவற் காட்டோடு அகழியும் அப்பகைவரால் சிதைவுறாதபடி நொச்சி மறவர் போர் செய்த மாண்பினைச் சொல்லியது ஊர்ச் செரு என்னும் துறையாம்

(எ.டு)

"வளையும் வயிரும் ஒலிப்பவாள் வீசி இளையும் கிடங்கும் சிதையத்-தளைபரிந்த நோனார் படையிரிய நொச்சி விறல்மறவர் ஆனார் அமர்விலக்கி ஆர்ப்பு."

எயில்தனை யழித்தல்:

மதிலைக் காவல் செய்த நொச்சி மறவரது அழிவைக் கூறியது எயில்தனை யழித்தல் என்னுந்துறையாம்.