உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

66

புறப்பொருள்

“எழுதெழில் மாடத் திடனெலாம் நூறிக்

கழுதையேர் கையொளிர்வேல் கோலா-உழுததற்பின் வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற்

கள்விரவு தாரான் கதம்.

உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு:

237

பகைவர் நாட்டை வெல்ல வேண்டும் என்று எண்ணிய எண்ணத்தினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன் படைத் தலைவன் முதலியோரும் வேற்றுவேந்தன் பால் தூது செல்வோரும் எடுத்துரைத்தலாம்.

உன்னநிலை:

வீரக் கழலினையுடைய மன்னனை நிமித்தம் பார்க்கும் மரத்தோடு கூட்டி அவனது மிக்க புகழைக் கூறுவது உன்ன நிலை என்னும் துறையாம். உன்னம் என்பது ஒருவகை மரம். அது நாட்டகத்துக்குக் கேடு வருங்கால் உலறியும் வாராக் காலத்துக் குழைந்தும் நிற்கும் என்பர்.

(எ.டு)

"துன்னருந் தானை தொடுகழலான் துப்பெதிர்ந்து முன்னர் வணங்கார் முரண்முருங்க-மன்னரும் ஈடெலாம் தாங்கி இகலவிந்தார் நீயும்நின்

கோடெலாம் உன்னம் குழை.

ஊடலுள் நெகிழ்தல்;

தலைவி மாலைப் பொழுதிலே தன் நெஞ்சு ஊடிய வழிக் குழைந்தது ஊடலுள் நெகிழ்தல் என்னும் துறையாம். (எ.டு)

“தெரிவின்றி ஊடத் தெரிந்து நங் கேள்வர்

பிரிவின்றி நல்கினும் பேணாய்-திரிவின்றித் துஞ்சேம் எனமொழிதி தூங்கிருள் மால்மாலை நெஞ்சே உடையை நிறை.’