உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ்வளம்

4

விரையாற் கமழும் விறல்மலை நாடன் உரையால் தளிர்க்கும் உயிர்.”

உவகைக் கலுழ்ச்சி:

பகைவரது வாளாலே விழுப்புண் பட்டு மாய்ந்தவனது உடலைக் கண்டு, மறக்குடிப் பிறந்த அவனது இல்லாள் உவந்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தது உவகைக் கலுழ்ச்சி என்னும் துறை

யாம்.

(எ.டு)

"வெந்தொழிற் கூற்றமும் நாணின்று வெங்களத்து

வந்த மறவர்கை வாள்துமிப்பப்- பைந்தொடி

ஆடரிமா அன்னான் கிடப்ப அகத்துவகை ஓடரிக்கண் நீர்பா யுக.

உழபுலவஞ்சி:

வஞ்சி வேந்தன் தன் பகைவருடைய வளப்பம் பொருந்திய நாட்டினைத் தீக் கொளுத்தியது உழபுலவஞ்சி என்னுந்துறையாம். (எ.டு)

66

அயிலன்ன கண்புதைத் தஞ்சி யலறி

மயிலன்னார் மன்றம் படரத்-குயிலகவ

ஆடிரிய வண்டிமிரும் செம்மல் அடையார்நாட்டு ஓடெரியுள் வைகின ஊர்”

உழிஞைத்திணை:

உழிஞை என்னும் புறத்திணை மருதம் என்னும் அகத் திணைக்குப் புறனாம். அது, முழுமையான தலைமையையுடைய பகைவரின் மதிலைக் கைப் பற்றுதலும், அழித்தலுமாகிய வழக் தினை லக்கணமாகவுடையது. இத்திணையார் உழிை ை மாலையைச் சூடிக்கொள்வர்.

உழுதுவித்திடுதல்:

உழிஞையார் நொச்சியாரது பலவேறு அரண்களையும் கழுதையாகிய ஏரினைப் பூட்டி உழும்படி செய்து வரகையும் கொள்ளையும் விதைத்தது உழுது வித்திடுதல் என்னும் துறையாம்.