உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

66

புறப்பொருள்

'கல்லெனீர் வேலிக் கணவன் கழல்வாழ்த்தி

ஒல்லும் வகையால் விருந்தோம்பிச்- செல்லுந்தம் இற்செல்வம் அன்றி இரந்தவர்க் கீகல்லாப்

புற்செல்வம் பூவா புகழ்.

உட்கோள்: -(அ)

235

வண்டு பொருந்திய மயிரினை யுடைய தலைவனை விரும் பிய தலைவி, அத்தலைவனைக் கூடக் கருதியது உட்கோள் என்னும் துறையாம்.

(எ.டு)

“உள்ளம் உருக ஒளிவளையும் கைநில்லா

கள்ளவிழ் தாரானும் கைக்கிணையான்-எள்ளிச் சிறுபுன் மாலை தலைவரின்

உறுதுயர் அவலத் துயலோ அரிதே."

உட்கோள்: -(ஆ)

தலைவி என் நெஞ்சிலே வீற்றிருந்தும், எனது விருப்பத்தின் பெருமையை உணர்ந்திலள் என்று தலைவன் தன் உள்ளத்திலே கருதியது உட்கோள் என்னும் துறையாம்.

(எ.டு)

66

'கவ்வை பெருகக் கரந்தென் மனத்திருந்தும்

செவ்வாய்ப் பெருந்தோள் திருநுதலாள்-அவ்வாயில்

அஞ்சொல் மாரிபெய் தவியாள்

நெஞ்சம் பொத்தி நிறைசுடும் நெருப்பே.”

உரைகேட்டு நயத்தல்:

காமத்துன்பத்தில் அழுந்தியிருந்த தலைவி தலைவனது மொழி கேட்டு விரும்பியது, உரைகேட்டு நயத்தல் என்னும் துறையாம்.

(எ.டு)

66

'ஆழ விடுமோ அலரொடு வைகினும்

தாழ்குரல் ஏனல் தலைக்கொண்ட-தூழில்