உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிவன்முல்லை:

புறப்பொருள்

245

மாத்திரை முதலாக நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், பெரும் பொழுது, அயனம், யாண்டு, ஊழி, எனப் பலவகைப் படும் காலத்தையும், ஞாயிறு முதலிய கோணிலை களையும் கணித்தறியும் காலக் கணிதனுடைய திறத்தைப் புகழ்ந்தது கணிவன் முல்லை என்னும் துறையாம்.

(எ.டு)

66

‘புரிவின்றி யாக்கைபோற் போற்றுப போற்றிப் பரிவின்றிப் பட்டாங் கறியத்-திரிவின்றி

விண்ணிவ் வுலகம் விளைக்கும் விளைவெல்லாம் கண்ணி உரைப்பான் கணி.'

கண்டுகண் சிவத்தல்:

பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனது நறிய மாலையைக் கண்டு கலங்கித் தலைவி சினந்தது கண்டு கண் சிவத்தல் என்னும் துறையாம்.

(எ.டு)

66

'கூடிய கொண்கன் குறுகக் கொடிமார்பின் ஆடிய சாந்தின் அணிதொடர்ந்து-வாடிய தார்க்குவளை கண்டு தரியா இவள்முகத்த கார்க்குவளை காலுங் கனல்.

கண்டு கை சோர்தல்:

தலைவியினுடைய காமம் கை கடந்து பெருகா நிற்ப, அதனைக் கண்ட தோழி செய்வதறியாது திகைத்தல் கண்டு கை சோர்தல் என்னும் துறையாம்.

(எ.டு)

“ஆம்பல் நுடங்கும் அணிவளையும் ஏகின கூம்பல் மறந்த கொழுங்கயற்கண்-காம்பின் எழில்வாய்ந்த தோளி எவனாங்கொல் கானற் பொழிலெல்லாம் ஈயும் புலம்பு.

கண்படை நிலை: -(அ)

وو

அரசரும் அரசரைப் போல்வாரும் அவைக்கண் நெடிதுவைகிய வழி மருத்துவரும் அமைச்சரும் முதலியோர் அவர்கட்குக் கண் துயில் கொள்ளலைக் கருதிக் கூறுவது கண்படை நிலையாகும்.