உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

(எ.டு)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“வாய்வாட் டானை வயங்குபுகழ்ச் சென்னிநின் னோவா வீகையி னுயிர்ப்பிடம் பெறாஅர் களிறுகவர் முயற்சியிற் பெரிது வருந்தினரே யுலகங் காவலர் பலர்விழித் திருப்ப வறிதுதுயில் கோடல் வேண்டுநின் பரிசின் மாக்களுந் துயில்கமா சிறிதே”

கண்படைநிலை:-(ஆ)

பகைவரை வென்று அவர் நிலத்தைக் கைப்பற்றிய தறு கண்மையுடைய மன்னரது உறக்கத்தைப் பாராட்டியது கண் படைநிலை என்னும் துறையாம்.

(எ.டு)

"கொங்கலர்தார் மன்னருங் கூட்டளப்பக் கூற்றணங்கும் வெங்கதிர்வேல் தண்தெரியல் வேந்தற்குப்- பொங்கும் புனலாடை யாளும் புனைகுடைக்கீழ் வைக்க கனலா துயிலேற்ற கண்.'

கந்தழி:

ஆழிப்படையை யுடைய மாயோன் வீரசோ என்னும் அரணத்தினை அழித்த வெற்றியைப் புகழ்ந்தது கந்தழி என்னும் துறையாம்.

(எ.டு)

“மாயவன் மாயம் அதுவால் மணிநிரையுள்

ஆயனா எண்ணல் அவனருளான்-காயக்

கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச்

சுழலழலுள் வைகின்று சோ.”

கபிலை கண்ணிய வேள்விநிலை:

கபில நிறப் பசுவினைக் கொடுக்கக் கருதிய கொடையினைக் கூறுவது கபிலைகண்ணிய வேள்வி நிலையாகும்.

(எ.டு)

“பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந் தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச்-சென்னிதன்