உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

மாநிலமே யானுலகம் போன்றது வான்றுகள்போர்த் தானுலக மண்ணுலகா மன்று

கபிலை கண்ணிய புண்ணிய நிலை:

247

நான்கு மறைகளையும் கற்றுணர்ந்த குளிர்ந்த தன்மை யுடையார்க்குத் தானமாகக் கொடுக்கக் கருதிய ஆவினது தன்மையைக் கூறியது கபிலை கண்ணிய புண்ணிய நிலையாகும்.

(எ.டு)

“பருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்

குருக்கண் கபிலை கொடுத்தான்-செருக்கொடு இடிமுரசத் தானை இகலிரிய எங்கோன் கடிமுரசம் காலைச் செய.”

கரந்தை:

வெட்சியார் ஆனிரைகளைக் கவர்ந்தமையைக் கேட்ட அப்பசுக் கூட்டத்தையுடைய அரசன் படை மறவர் விரைந்து சென்று வெட்சியாரோடு இடை வழியிற் போர் செய்து தமது ஆனிரைகளை மீட்டது கரந்தைத் திணை எனப்படும்.

(எ.டு)

“அழுங்கனீர் வையகத் தாருயிரைக் கூற்றம் விழுங்கியபின் வீடுகொண் டற்றாற்-செழுங்குடிகள் தாரார் கரந்தை தலைமலைந்து தாங்கோடல் நேரார்கைக் கொண்ட நிரை.’

கரந்தையரவம்:

வெட்சியார் தம்முடைய ஆனிரைகளைக் கைப்பற்றிய செய்தியைத் தூதர் மூலம் அறிந்தவுடன், கரந்தையார் தாம் தாம் செய்த தொழிலை நிறுத்தி ஓரிடத்தே கூடிய செய்தியைக் கூறியது கரந்தை யரவம் என்னும் துறையாம்

(எ.டு)

66

'காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட வேலார் வெருவந்த தோற்றத்தார்-காலன் கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே உளர்ந்தார் நிரைப் பெயர்வு முண்டு.

99