உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

கழல் நிலை: (1)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

கழல் கட்டிய வீரர் மழலைப் பருவத்தினையுடைய ஒருவன் களத்திடை ஓடாது நின்றமை கண்டு அவனைப் புகழ்ந்து அவ னுக்குக் கழல் கட்டுதல்.

கழல் நிலை: (2)

இகலைப் பெருக்கும் மறவர் படுதற் கிடமான போரின்கண் வலிமை மிக்க வீரன் கழல் கட்டியது கழல் நிலை என்னும் துறையாம்.

(61.6)

“வாளமரின் முன்விலக்கி வான்படர்வார் யார்கொலோ

கேளலார் நீக்கிய கிண்கிணிக்காற்-காளை

கலங்கழல் வாயிற் கடுத்தீற்றி அற்றால்

பொலங்கழல் கால்மேற் புனைவு.

களவழி வாழ்த்து:

99

ஒன்பான் இசையில் ஒன்றாகிய வெண்டுறை இசையில் வல்ல யாழ்ப்பாணர் ஒரு மன்னன் போர்க்களத்தில் கொண்ட செல்வத்தினைக் கூறியது களவழி வாழ்த்து என்னும் துறையாம்.

(எ.டு)

“ஈண்டி யெருவை யிறகுளரும் வெங்களத்து

வேண்டியாம் கொண்ட விறல்வேழம்- வேண்டாள் வளைகள் வயிரியம்பும் வாள்தானை வேந்தே விளைகள் பகர்வான் விலை."

களவேள்வி:

وو

பேய்கள் வயிறார உண்ணும் படிவாகை சூடிய வேந்தன் பகைவரைக் கொன்று களவேள்வி விட்டது களவேள்வி என்னும் துறையாம்.

(எ.டு)

“பிடித்தாடி அன்ன பிறழ்பற்பேய் ஆரக்

கொடித்தானை மன்னன் கொடுத்தான்-முடித்தலைத்

தோளோடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக

மூளையஞ் சோற்றை முகந்து.

99