உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவழி பாடுதல்:

புறப்பொருள்

249

உழவர்கள் நெற்களத்திடைச் செய்யும் தொழில் யாவும் செய்து அறஞ்செய்யுமாறு போல, அரசன் போர்க்களத்துப் பகைவர்களைக் கொன்று கைக் கொண்ட பொருள்களைப் பரிசிலர்க்கு அளிக்குந்திறத்தினைப் புலவர்கள் களவழியாகப் பாடுதலாம்.

(எ.டு)

66

'ஓ ஒ வுவமை யுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்

மாவுதைப்ப மாற்றார் குடையெல்லாங் கீழ்மேலா யாவுதை காளாம்பி போன்ற புனனாடன்

மேவாரை யட்ட களத்து

களிற்றுடனிலை:

வேல் மறவன் ஒருவன் யானை யேறிவரும் மறவனது யானையை வீழ்த்த, அவ்வியானை அவ்வேல் மறவனை வீழ்த்த, அவன் அவ்வியானையின் கீழ் வீழ்ந்து இறந்தது களிற்றுடனிலை என்னும் துறையாம்.

(எ.டு)

“இறுவரை வீழ இயக்கற் றவிந்த

தறுகண் தகையரிமாப் போன்றான்-சிறுகண்

பெருங்கைக் களிறெறிந்து பின்னதன் கீழ்ப்பட்ட

கருங்கழற் செவ்வே லவன்.'

கற்கோள்நிலை:

உலகம் வியக்குமாறு பறைகள் முழங்கத், துறக்க மெய்திய மறவனுக்குக் கற்கொண்டது கற்கோள் நிலை என்னும் துறையாம்.

(எ.டு)

"பூவொடு நீர் தூவிப் பொங்க விரைபுகைத்து நாவுடை நன்மணி நன்கியம்ப- மேவார் அழல்மறங் காற்றி அவிந்தாற்கென் றேத்திக் கழல்மறவர் கைக்கொண்டார் கல்.