உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

கற்புமுல்லை: (அ)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பொன்போல் விளங்கும் சுணங்கினையும் பொலிந்த கண்ணினையும் உடையாளொரு தலைவி, தன் கணவனுடைய நன்மையைப் பாராட்டியது கற்பு முல்லை என்னும் துறையாம்.

(எ.டு)

“நெய்கொள் நிணந்தூ நிறைய அமைத்திட்ட குய்கொள் அடிசில் பிறர்நுகர்க- வைகலும் அங்குழைக் கீரை அடகு மிசையினும் எங்கணவன் நல்கல் இனிது.”

கற்புமுல்லை: (ஆ)

கணவன் பிரியினும் மகளிர்க்குளதாகிய நிறைகாவலைக் கூறியதும் கற்பு முல்லை என்னும் துறையாம்.

(எ.டு)

“மௌவல் விரியும் மணங்கமழ் மால்மாலைத் தௌவல் முதுகுரம்பைத் தான்தமியள்-செல்வன் இறைகாக்கும் இவ்வுலகின் இற்பிறந்த நல்லாள் சிறைகாப்ப வைகும் நிறை.”

கற்புமுல்லை: (இ

(g)

தலைவி தன் தலைவனது செல்வம் பெருகும் இல்லத்தின் கண்ணே நிறைந்த பெருவளத்தை வாழ்த்தினும் கற்புமுல்லை என்னும் துறையாம்.

(எ.டு)

“ஊழிதோ றூழி தொழப்பட் டுலைவின்றி

ஆழிசூழ் வையத் தகமலிய- வாழி

கருவரை மார்பினெம் காதலன் நல்க வருவிருந் தோம்பும் வளம்.

கனவின் அரற்றல்: -(அ)

என்னால் விரும்பப் பட்ட இரவு அத்தலைவனொடு வரு மாயின் யான் பிழைப்பேன் எனக் கூறியது கனவின் அரற்றல் என்னும் துறையாம்.