உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(6.6)

66

புறப்பொருள்

251

"நனவினால் நல்கா தவரைக் கனவினாற்

காண்டலின் உண்டென் உயிர்."

கனவின் அரற்றல்; -(ஆ)

வளையலை யுடைய தலைவி அச்சம் பொருந்திய இரவின் கண் கனவிடத்தே காணப்பட்ட தலைவன் ஒளிப்ப வாய் விட்டுப் புலம்பியதும் கனவின் அரற்றல் என்னும் துறையாம்.

(எ.டு)

“அயர்வொடு நின்றேன் அரும்படர் நோய் தீர

நயவரும் பள்ளிமேல் நல்கிக்- கயவா

நனவிடைத் தமியேன் வைகக்

கனவிடைத் தோன்றிக் கரத்தல் நீ கொடிதே.”

காஞ்சியின் இயல்பு:

'காஞ்சி' என்னும் புறத்திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப்

புறனாகும். அது, துணையாதற்கரிய சிறப்பினால் பலவழியானும் நிலை யில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியை உடைத்து. அஃதாவது, நிலையாமைப் பாருளது. நிலையாமை, இளமை நிலையாமை, நிலையாமை, யாக்கை நிலையாமை என மூன்றாம்.

(எ.டு)

சல்வ

66

அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கி யுண்டாரும்-வறிஞராய்ச்

சென்றிரப்பர் ஓரிடத்திற் கூழெனிற் செல்வமொன்று உண்டாக வைக்கற்பாற் றன்று”

காஞ்சித்திணை:

வஞ்சி வேந்தன் போர் மேற்கொண்டு தன் நாட்டிடத்தே நிற்க, அந்நாட்டிற்குரிய அரசன் காஞ்சிப் பூ மாலையைச் சூடிக் கொண்டு தன் காவலிடத்தைக் காக்கக் கருதியது காஞ்சித் திணையாகும்.