உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

“மங்குல் மனங்கவர மால்மாலை நின்றேற்குப் பொங்கும் அருவிப் புனல்நாடன்-கங்குல்

வருவான்கொல் வந்தென் வனமுலைமேல் வைகித் தருவான்கொல் மார்பணிந்த தார்.

கையறு நிலை: (அ)

99

263

கையறு நிலையாவது. கணவனோடு மனைவியர் இறந்த விடத்து அவர்கட்பட்ட அழிவுப் பொருளெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்து படாமல் நீங்கிய தோழியரும் பரிசில் பெறும் விறலியரும் மிகவுந் துன்புற்ற நிலையைக் குறிப்பதாம். (6.6)

“தேரோன் மகன்பட்ட செங்களத்து ளிவ்வுடம்பிற்

றீராத பண்பிற் றிருமடந்தை-வாரா

வுலகத் துடம்பிற் கொழிந்தனள் கொல்லோ வலகற்ற கற்பி னவள்”

கையறுநிலை: (ஆ)

வாட் போரிலே பட்ட கரந்தை மறவன் நிலைகண்டு அவ னாற் புரக்கப் பட்ட பாணர்கள் தம் செயலுறுதியைக் கூறியது கையறுநிலை என்னும் துறையாம்.

(61.G)

66

"நாப்புலவர் சொன்மாலை நண்ணார் படை யுழக்கித் தாப்புலி யொப்பத் தலைக் கொண்டான்- பூப்புனையும் நற்குலத்துள் தோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர் கற்கொலோ சோர்ந்திலவெங் கண்.

கொடிநிலை:

சிவன் திருமால் நான்முகன் என்னும் கடவுளர் மூவருடைய கொடிகளுள் ஒன்றனோடு மன்னவன் கொடியை உவமித்துப் புகழ்ந்தது கொடி நிலை என்னும் துறையாம்.

(எ.டு)

“பூங்கண் நெடுமுடிப் பூவைப்பூ மேனியான்

பாம்புண் பறவைக் கொடிபோல-ஓங்குக