உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

கூதிர்ப் பாசறை:

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பகைவனுக்குக் கூற்றுவனை கூற்றுவனை ஒத்த மன்னன்

காமம்

வருத்தும் கூதிர்காலத்தும் மறமே நினைந்து பாசறையிடத்துத் தங்கியது கூதிர்ப் பாசறை என்னும் துறையாம்.

(எ.டு)

66

கவலை மறுகிற் கடுங்கண் மறவர்

உவலைசெய் கூரை ஒடுங்கத்-துவலைசெய் கூதிர் நலியவும் உள்ளான் கொடித்தேரான் மூதில் மடவாள் முயக்கு.’

கூட்டத்துக்குழைதல்:

தலைவி தலைவனோடு புணர்ந்திருக்கும் பொழுதே அவன் பிரிவான் என்னும் நினைவினால் ஆற்றாளாய் நெஞ்சு நெகிழ்ந்தது கூட்டத்துக் குழைதல் என்னும் துறையாம்.

(எ.டு)

"மயங்கி மகிழ்பெருக மால்வரை மார்பில் தயங்கு புனலூரன் தண்தார்-முயங்கியும் பேதை புலம்பப் பிரிதியோ நீயென்னும் கோதைசூழ் கொம்பிற் குழைந்து.

கூத்தராற்றுப் படை:

வள்ளல் பால் பரிசில் பெற்றுச் சென்ற இரவலனாகிய கூத்தன் தன் எதிர் வந்த கூத்தரை அவ்வள்ளல் பால் செல்லும் வழியிற் செலுத்தியது கூத்தராற்றுப்படை என்னும் துறையாம். (எ.டு)

"கொலைவிற் புருவத்துக் கொம்பன்னார் கூத்தின் தலைவ தவிராது சேறி-சிலைகுலாம்

காரினை வென்ற கவிகையான் கைவளம் வாரினை கொண்டு வரற்கு.”

கைக்கிளை:

நுடங்கும் இயல்பினையும்

கெடாத அன்பினையும் நுடங்கும்

உடையாளொருத்தி ஒரு தலைவனது மாலையை விரும்பியது

கைக்கிளை என்னும் துறையாம்.

கைக்கிளை-ஒரு தலைக்காமம்.