உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றுழிஞை: (ஆ)

புறப்பொருள்

261

உழிஞை வேந்தன் நொச்சி மன்னனின் காவற்காட்டைக் கடந்து புகுதலும் குற்றுழிஞை என்னும் துறையாம்.

(6.6)

66

அந்தரந் தோயும் அமையோங் கருமிளை

மைந்தார் மறிய மறங்கடந்து-பைந்தார்

விரைமார்பின் வில்நரல வெங்கணை தூவார் வரைமார்பின் வைகின வாள்.

குற்றுழிஞை: (இ)

பகைவரது மதிலின்மேல் தன் துணைவரையும் எதிர் பாராமல் தான் ஒருவனே யாகிய உழிஞை வேந்தனின் மாறு பாட்டினைப் பெருக்கியது குற்றுழிஞை என்னும் துறையாம்.

(எ.டு)

"குளிறு முரசினான் கொண்டான் அரணம் களிறும் கதவிறப் பாய்ந்த- ஒளிறும்

அயிற்றுப் படைந்த அணியெழு எல்லாம் எயிற்றுப் படையால் இடந்து.'

குற்றுழிஞை: (ஈ)

மதிலின் உள்ளே இருந்தவன், தன் மதில் அழியத் தொடங்கிய விடத்துப் புறத்தே (வெளியே) உள்ளவனுடன் தான் ஒருவனேயாகிச் சென்று போர் செய்வதும் குற்றுழிஞையாகும்.

(எ.டு)

"மொய்வேற் கையர் முரண்சிறந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட

தெவ்வழி யென்றி வியன்றார் மார்ப

வெவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித்

திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர்

பைந்தலை யுதைத்த மைந்து மலிதடக்கை

யாண்டகை மறவர் மலிந்துபிறர்

தீண்டல் தகாது வெந்துறை யரணே'