உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

(6.6)

66

இளங்குமரனார் தமிழ்வளம்

4

வரிப்பந்து கொண்டொளித்தாய் வாள்வேந்தன் மைந்தா அரிக்கண்ணி அஞ்சி அலற-எரிக்கதிர்வேற்

செங்கோலன் நுங்கோச் சினக்களிற்றின் மேல்வரினும் எங்கோலம் தீண்டல் இனி.”

குறுங்கலி:

தலைவன் தலைவியை அறவே கைவிட்டுப் பிற மகளிரை விரும்புவதற்கு அவன் நெஞ்சத்தே மாறுபட்டெழுந்த காமவேட்கை கெடும்படி கூறியது குறுங்கலி என்னும் துறையாம்.

(6.6)

“பண்ணாவாம் தீஞ்சொல் பவளத் துவர்ச் செவ்வாய்

பெண்ணாவாம் பேரல்குற் பெய்வளை-கண்ணாவாம். நன்னலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ

தொன்னலம் உண்டார் தொடர்பு.

குற்றிசை:

தலைவன் தலைவியோடு இறுதிவரை வாழாது இடையே கைவிட்டது குற்றிசை என்னும் துறையாம்.

(எ.டு)

66

கரிய பெருந்தடங்கண் வெள்வளைக்கை யாளை மரிய கழிகேண்மை மைந்த- தெரியின்

விளிந்தாங் கொழியினும் விட்டகலார் தம்மைத் தெளிந்தாரில் தீர்வது தீது."

குற்றுழிஞை: (அ)

கிடுகுப் படையை யுடைய உழிஞைப் படை மறவர்கள் கூத்தாடிக் கொண்டு நொச்சியாரது மதிலை அடைதலும் குற்று ழிஞை என்னும் துறையாம்.

(61.6)

“நிரைபொறி வாயில் நெடுமதிற் சூழி

வரைபுகு புள்ளினம் மான-விரைபடைந்தார் வேலேந்து தானை விறலோன் விறல்மறவர் தோலேந்தி ஆடல் தொடர்ந்து.'

99