உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடை மங்கலம்:

புறப்பொருள்

259

நான்கு திசைகளினும் தனது புகழ் பெருகும் படி அரியணைமிசைச் செம்மாந்திருந்த மன்னனுடைய குடையைப் புகழ்ந்தது.

(எ.டு)

66

'தன்னிழலோர் எல்லோர்க்கும் தண்கதிராம் தற்சேரா

வெந்நிழலோர் எல்லோர்க்கும் வெங்கதிராம்- இன்னிழல்வேல் மூவா விழுப்புகழ் முல்லைத்தார்ச் செம்பியன்

கோவாய் உயர்த்த குடை.

குதிரை மறம்: (அ)

நொச்சியாரது குதிரையின் மறப்பண்பைப் பாராட்டியது

குதிரை மறம் என்னுந்துறையாம்.

(எ.டு)

“தாங்கன்மின் தாங்கன்மின் தானை விறன் மறவர்

ஓங்கல் மதிலுள் ஒருதனிமா-ஞாங்கர்

மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார்

உயிருணிய ஓடி வரும்.

குதிரைமறம்: (ஆ)

தும்பை மன்னனது குதிரைப் படையின் தறுகண்மையைச் சொல்லியது குதிரைமறம் என்னும் துறையாம்

(எ.டு)

66

'குந்தங் கொடுவில் குருதிவேல் கூடாதார்

வந்த வகையறியா வாளமருள்- வெந்திறல் ஆர்கழல் மன்னன் அலங்குளைமா வெஞ்சிலை வார்கணையின் முந்தி வரும்.

குழவிக் கண் தோன்றிய காமப் பகுதி:

குழவிப் பருவத்தையுடைய சிறாரிடத்து மங்கையர் காமுறு தலைச் சொல்லியது குழவிக்கண் தோன்றிய காமப் பகுதி என்னும் துறையாம்.