உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

265

கொடைமை:

கொடைமையாவது, படையெடுத்துச் செல்லும் வேந்தர் தத்தம் படையாளர்க்குப் படைக்கலம் முதலிய கொடுத்தலும், பரிசிலர்க்கு அளித்தலும் ஆகிய கொடுத்தலைப் பொருந்தியதாம். (எ.டு)

"வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந் தேத்துநர்க் கீதுமென் றெண்ணுமோ-பாத்தி யுடைக்கலி மான்றே ருடனீந்தா னீந்த

படைக்கலத்திற் சாலப் பல

கொடைவஞ்சி:

நீண் டொலிக்கும் படியும், குறுகி யொலிக்கும் படியும் டைநிகராய் யொலிக்கும் படியும் இசையினை அளந்து தனது வெற்றியைப் பாடிய இசை வாணர்க்கு வஞ்சி வேந்தன் பரிசில் வழங்கியது.

(எ.டு)

66

“சுற்றிய சுற்ற முடன்மயங்கித் தம்வயிறு

எற்றி மடவார் இரிந்தோட-முற்றிக்

குரிசி லமையாரைக் கொண்டகூட் டெல்லாம்

பரிசில் முகந்தன பாண்.'

கொண்டகம் புகுதல்:

காமம் பெருகுதலால் தலைவி தலைவனைக் கண்டு அவனை மாலையாலே கட்டி அகப்படுத்துக் கொண்டு தனது இல்லிலே புகுந்தது கொண்டகம் புகுதல் என்னும் துறையாம். (எ.டு)

66

'கண்டு களித்துக் கயலுண்கண் நீர்மல்கக்

கொண்டகம் புக்காள் கொடியன்னாள்-வண்டினம் காலையாழ் செய்யும் கருவரை நாடனை மாலையான் மார்பம் பிணித்து.”

99

கொள்ளார்தேஎங் குறித்த கொற்றம்:

தன்னை அரசனென்று ஏற்றுக் கொள்ளாதாரும், தன் ஆணைவழி நில்லாதவருமாகிய பகைவரது நாட்டை வெற்றி கொண்ட சிறப்பினைக் கூறுவதாம்.