உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

(எ.டு)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

"மாற்றுப் புலந்தோறு மண்டிலமாக் கள்செல

வேற்றுப் புலவேந்தர் வெல்வேந்தர்க்- கேற்ற படையொலியிற் பாணொலி பல்கின்றா லொன்னா ருடையன தாம்பெற்று வந்து"

கொற்ற உழிஞை:

உழிஞை வேந்தன் பகையரசர் மதிலைக் கைப்பற்றக் கருதி படையெடுத்துச் சென்றது கொற்ற உழிஞை என்னுந் துறையாம்.

(எ.டு)

“வெள்வாட் கருங்கழற்கால் வெஞ்சுடர்வேல் தண்ணளியான் கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்- நள்ளாதார் அஞ்சுவரு வாயில் அருமிளைக் கொண்டகழி

மஞ்சிவரு ஞாயில் மதில்."

கொற்றம்:

படை யெடுத்துச் சென்ற இருபெருவேந்தர் படையாளர் வரவறியாமல் இரவும் பகலும் L பலகாலும் தாம் அந்நாட்டைக் காவல் புரிந்தோரைக் கொல்வது கொற்றமாம்.

(எ.டு)

“நீணில வேந்தர் நாட்செல் விருப்பத்துத்

ஏறி

தோள்சுமந் திருத்த லாற்றா ராள்வினைக்

கொண்டி மாக்க ளுண்டியின் முனிந்து

முனைப்புல மருங்கி னினைப்பருஞ் செய்வினை

வென்றியது முடித்தனர் மாதோ

யாங்குள கொல்லினி யூங்குப்பெறுஞ் செருவே”

கொற்றவைநிலை:

அறிவு ஒளியினின்றும் நீங்காத வெற்றியையுடைய சூலப் படையை ஏந்திய இறைவியாகிய வெற்றித் திருமகளது அருட் சிறப்பை வியந்து கூறியது கொற்றவைநிலை என்னும் துறையாம். (எ.டு)

“ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக் கூளி மலிபடைக் கொற்றவை-மீளி