உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

அரண் முருங்க ஆகோள் கருதினடையார் முரண்முருங்கத் தான்முந் துறும்.”

கொற்றவள்ளை: (அ)

267

வேந்தனது குறையாத வெற்றிச்சிறப்பினால் பகைவர் நாடு அழிவிற்கு இரங்கித் தோற்றோனை விளங்கக் கூறுவது கொற்ற வள்ளையாகும்.

(எ.டு)

“வேரறுகு பம்பிச் சுரைபரந்து வேளைபூத்து ஊரறிய லாகா துடைந்தனவே-போரின்

முகையவிழ்தார்க் கோதை முசிறியோர் கோமான்

அகையிலைவேல் காய்த்தினார் நாடு"

கொற்றவள்ளை: (ஆ)

வஞ்சி வேந்தனது புகழை வள்ளைப் பாட்டால் எடுத்தோதி அம்மன்னனின் பகைவர் நாட்டின் அழிவிற்கு வருந்தியதும் கொற்ற வள்ளை என்னுந்துறையாம்.

(எ.டு)

66

'தாழார மார்பினான் தாமரைக்கண் சேந்தனவாற் பாழாய்ப் பரிய விளிவதுகொல்- யாழாய்ப் புடைத்தேன் இமிர்கண்ணிப் பூங்கண் புதல்வர் நடைத்தேர் ஒலிகறங்கு நாடு”

கொற்றவஞ்சி:

வஞ்சி வேந்தனது வாட்போரினுடைய வெற்றியைச் சிறப் பித்துக் கூறுவது கொற்றவஞ்சி என்னுந்துறையாம்.

(எ.டு)

“அழலடைந்த மன்றத் தலந்தயரா நின்றார்

நிழலடைந்தே நின்னையென் றேத்திக்-கழலடையச் செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக் கொற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ

சால்புமுல்லை:

பல நற்குணங்களாலும் நிறைந்த சான்றோரது அமைதியைச் சொல்லியது சால்பு முல்லை என்னும் துறையாம்.