உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

(6.6)

66

இளங்குமரனார் தமிழ்வளம்

4

‘உறையார் விசும்பின் உவாமதி போல

நிறையா நிலவுதல் அன்றிக்- குறையாத

வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ சங்கம்போல் வான்மையார் சால்பு.

சான்றோர்பக்கம்:

99

பகடு(எருது) புறந்தருகிற வேளாளரும் ஆ (பசு) வினைப் பாதுகாக்கும் வணிகரும் ஆகிய சிறப்பினையுடைய சான்றோரது பாகுபாட்டினைக் கூறுந்திறம்.

(61.6)

“யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தோ ரேனை நிரையுடைய வேர்வாழ்நர்-யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே ருடையோர்க் கரசரோ வொப்பு’

சிருங்காரநிலை:

பகைவரும் புகழுமாறு போர்க்களத்தே இறந்து கிடந்த மறவனை மகளிர் தழுவியது சிருங்கார நிலை என்னுந் துறையாம். (616)

எங்கணவன் எங்கணவன் என்பார் இகல்வாடத்

தங்கணவன் தார்தம் முலைமுகப்ப - வெங்கணைசேர் புண்ணுடை மார்பம் பொருகளத்துப் புல்லினார் நுண்ணிடைப் பேரல்கு லார்.

சுரநடை:

மூங்கில் நிறைந்த காட்டிடத்துத் தன்மனைவியை இழந்த தலைவனுடைய தன்மையைச் சொல்லியது சுரநடை என்னுந் துறையாம்.

(எடு)

உரவெரி வேய்ந்த உருப்பவிர் கானுள்

வரவெதிரின் வைவேல்வாய் வீழ்வாய் - கரவினால்