உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

பேதையைப் பெண்ணியலைப் பெய்வளையை என்மார்பிற் கோதையைக் கொண்டளித்த கூற்று.

சுரத்துய்த்தல்:

269

கடத்தற்கரிய வழியிடத்தும் அகன்ற காட்டின் கண்ணும் வெட்சி மறவர்தாம் கைப்பற்றிய பசுக்கூட்டங்களை வருந்தாமற் செலுத்தியது சுரத்துய்த்தல் என்னுந் துறையாம்.

(எடு)

புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும் வின்மேல் அசைஇயவை வேல்கழலான் - தன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்

நெடுவரை நீழல் நிரை.

செருவிடை வீழ்தல்:

அகழியையும் காவற்காட்டையும் பகைவர் சிதைக்காதவாறு காத்துப் போரிலே பட்ட நொச்சி மறவருடைய வெற்றியைக் கூறியது செருவிடை வீழ்தல் என்னுந்துறையாம்.

(எ.டு)

“ஈண்டரில் சூழ்ந்த இளையும் எரிமலர்க் காண்தகு நீள்கிடங்குங் காப்பாராய்-வேண்டார் மடங்கல் அனைய மறவேலோர் தத்தம் உடம்பொடு காவல் உயிர்”

செலவழுங்கல்:

தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்து பின்னர்ச் செலவழுங்கியது செலவழுங்கல் என்னும் துறையாம். (எ.டு)

“நடுங்கி நறுநுதலாள் நன்னலம்பீர் பூப்ப

ஒடுங்கி உயங்கல் ஒழியக்-கடுங்கணை வில்லேர் உழவர் விடரோங்கு மாமலைச் செல்லேம் ஒழிக செலவு.”