உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

இளங்குமரனார் தமிழ்வளம்

4

செல்கெனவிடுத்தல்:

இருட் பொழுதிலே மற்றொரு தலைவியின்பாற் செல்லும் தலைவனைத் தலைவி கண்டு நீ செல்க என்று கூறிவிட்டது செல்கென விடுத்தல் என்னும் துறையாம்.

(எ.டு)

66

விலங்குநர் ஈங்கில்லை வென்வேலோய் சென்றீ இலங்கிழை எவ்வம் நலியக் - கலங்கிக் குறியுள் வருந்தாமைக் குன்று சூழ்சோலை நெறியுள் விரிக நிலா.'

செவியறிவுறூஉ:

அறத்தினை ஆராயும் செங்கோலினையுடைய மன்னனுக்கு மறமும் பிறழ்ச்சியுமில்லாத நிலைதலுடைய பெரிய கருத்தினை உணருமாறு கூறியது செவியறிவுறூஉ என்னும் துறையாம். (61.6)

66

அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர்

தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே-முந்தை

வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி

மொழிநின்று கேட்டல் முறை.

தபுதார நிலை:

தபுதார நிலையாவது, தன்மனைவியைக் கணவன் இழந்த நிலையைக் குறிப்பதாகும்.

(எ.டு)

"யாங்குப் பெரிதாயினு நோயள வெனைத்தே யுயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற் கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத் தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனண் மடந்தை யின்னும் வாழ்வ லென்னிதன் பண்பே'

99

(புறம்-245)