உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைக்காஞ்சி:

புறப்பொருள்

271

போர்க்களத்திலே பெரும்போர் செய்து பகைவரைக்

கலக்கி இறுதியில் மாண்ட மறவனுடைய தலையைப்

பாராட்டியது தலைக்காஞ்சி என்னும் துறையாம்.

(எ.டு)

66

“விட்டிடினென் வேந்தன் விலையிடின்என் இவ்வுலகின்

இட்டுரையின் எய்துவ எய்திற்றால்-ஒட்டாதார்

போர்தாங்கி மின்னும் புலவாள் உறைகழியாத தார்தாங்கி வீழ்ந்தான் தலை.

தலைத்தோற்றம்:

99

வெட்சி மறவர் ஆத்திரளைக் கைக் கொண்டு அவர்தம் சுற்றத்தார்கள் மகிழ்தற்கேதுவாக ஊரின் அணித்தே வந்து தோன்றியது தலைத்தோற்றம் என்னுந் துறையாம்.

(எ.டு)

“மொய்யணல் ஆனிரை முன்செல்லப் பின்செல்லும்

மையணற் காளை மகிழ்துடி-கையணல்

வைத்த எயிற்றியர் வாட்கண் இடனாட

உய்த்தன் றுவகை ஒருங்கு.

தலைமாராயம்:

போரிலேபட்ட மறவன் தலையைக் கொணர்ந்தவன் மன மகிழ்ச்சியால் நிரம்பும் படி காஞ்சிவேந்தன் பொருள் வழங்கியது தலைமாராயம் என்னுந்துறையாம்.

(6.6)

“உவன்தலை என்னும் உறழ்வின்றி யொன்னார் இவன்தலையென் றேத்த இயலும்-அவன்தலை தந்தாற்கு நல்கல் வியப்போ கிளர்ந்தேத்தி வந்தார்க் குவந்தீயும் வாழ்வு

தலையொடுமுடிதல்:

போரின்கண் பட்ட

கணவனின் தலையைக் கண்ட

வழி

அத்தலையுடனே அவன் மனைவி இறந்தது தலையொடு

முடிதல் என்னுந்துறையாம்.