உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

(எ.டு)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

"கொலையானாக் கூற்றங் கொடிதே கொழுநன் தலையானாள் தையலாள் கண்டே-முலையால் முயங்கினாள் வாண்முகஞ் சேர்த்தினாள் அங்கே உயங்கினாள் ஓங்கிற் றுயிர்”

தவத்தை மேற் கொண்டவர்க்கு உரியவை:

நீரில் குளித்தல், தரையில் உறங்குதல், தோலை ஆடையாக உடுத்திக் கொள்ளுதல், சடைமுடியை வளர்த்தல், ஊர்ப் புறங் களுக்குச் செல்லாமை, காட்டு உணவினை உட்கொள்ளல், கடவுளரையும் ஞானிகளையும் வணங்குதல் முதலிய எட்டும் தவத்தை மேற் கொண்டார்க்கு உரியனவாம்.

(எ.டு)

“நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி-யூரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி”

66

66

எனவும்,

ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து”

எனவும்,

ஆரா வியற்கை யவா நீப்பி னந்நிலையே பேரா வியற்கை தகும்

எனவும் வரும்.

ஏனையவை வந்துழிக் காண்க.

தழிஞ்சி: (அ)

வெற்றியும் தோல்வியும் கண்ட அரசர்கள் தம் படை யாளர்களுள் போர் செய்த காலத்துப் பகைவரால் ஏவப்பட்ட அம்பு வேல் முதலியன பட்டு அழிந்தவர்களைத்தாம் நேரிற் சென்று பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவிக் கொள்ளுதல் தழிஞ்சி என்னுந்துறையாம்.