உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

“தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும் பழிச்சிய சீர்ப்பாசறை வேந்தன்-விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்

தழிஞ்சி: (ஆ)

273

வஞ்சி வேந்தன் படை தமது நாட்டினது எல்லையிற் புகாத வாறு அருவழியைக் காஞ்சியார் காத்ததும் தழிஞ்சி என்னும் துறையாம்.

(எ.டு)

66

"குலாவுஞ் சிலையார் குறும்புகொள வெஃகி

உலாவு முழப் பொழிக வேந்தன்-கலாவும் இனவேங்கை யன்ன இகல்வெய்யோர் காவல் புனவேய் நரலும் புழை.

தழிஞ்சி: (இ)

போரின்கண்

ஒரு மறவன் தனக்கு ஆற்றாது புறங்

காட்டுவார்பால் படைவிடாத பேராண்மையுடையனாதலைக் கண்டோர் கூறியது தழிஞ்சி என்னும் துறையாம்.

(எ.டு)

66

'கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினும்

தான்படை தீண்டாத் தறுகண்ணன்-வான்படர்தல் கண்ணியபி னன்றிக் கறுத்தார் மறந்தொலைதல் எண்ணியபின் போக்குமோ எஃகு.

தன்னை வேட்டல்: (அ)

தம் வேந்தன் போரின்கண் இறந்தமை பொறாது ஒரு போர் மறவன் அக் களத்திலேயே தனது உயிரைப் போக்கியது தன்னை வேட்டல் என்னுந் துறையாம்.

(எ.டு)

66

“வானம் இறைவன் படர்ந்தென வாள்துடுப்பா மானமே நெய்யா மறம்விறகாத்-தேனிமிரும்