உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

4 இளங்குமரனார் தமிழ்வளம்

கள்ளவிழ் கண்ணிக்கழல் வெய்யோன் வாளமர் ஒள்ளழலுள் வேட்டான் உயிர்.’

தன்னைவேட்டல்: (ஆ)

வேலினை ஏந்திய தன் கணவனை அவன் பட்ட களத்தே சென்று காணும் பொருட்டு மனைவி சென்றதும் தன்னை வேட்டல் என்னுந்துறையாம்.

(எ.டு)

“கற்பின் விழுமிய தில்லை கடையிறந்து

இற்பிறப்பும் நாணும் இடையொழிய-நற்போர்

அணங்கிய வெங்களத் தாருயிரைக் காண்பான் வணங்கிடை தானே வரும்."

தாபத நிலை:

தாபத நிலையாவது, காதலனை யிழந்த மனைவி இன்பம் செல்வம் ஆகியவற்றைத் துறந்து தவம் புரிந்து ஒழுகும் நிலையைக் குறிப்பதாம்.

(எ.டு)

"அளியதாமே சிறுவெள்ளாம்ப

லிளைய மாகத் தழையா யினவே யினியே,

பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்

தின்னா வைக லுண்ணும்

அல்லிப்படூம் உம் புல்லா யினவே'

தாபதவாகை:

(புறம்-248)

தவம் செய்யும் துறவியர் தாம் மேற்கொண்ட தவவொழுக்கங் களோடு நன்கு பொருந்தி அவ்வொழுக்கத்தினின்றும் பிறழாத தன்மையைச் சொல்லியது தாபத வாகை என்னும் துறையாம்.

(எ.டு)

"நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி- ஊரடையார்

கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்

வானகத் துய்க்கும் வழி.”

6