உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

தாய்தப வரூஉந் தலைப் பெயல் நிலை:

275

போரிடத்து விழுப்புண் படாது புறமுதுகிட்டதால் இறந்து படுகின்ற பெருஞ்சிறப்பினையுடைய மகனைப் பெற்றதாய் அவனைத் தழுவிக் கொள்ளும் நிலையே தலைப்பெயல்

நிலையாகும்.

(61.G)

66

வாதுவல் வயிறே வாதுவல் வயிறே நோவே னத்தை நின்னீன் றனனே

பொருந்தா மன்ன ரருஞ்சம முருக்கி யக்களத் தொழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சர மெறிந்த வெஃக மதன்முகத் தொழிய நீ போந் தனையே

யதனா, லெம்மில் செய்யாப் பெரும்பழி செய்த

கல்லாக் காளையை யீன்ற வயிறே"

தார் நிலை: (அ)

(தகடூர் யாத்திரை, புறத்திரட்டு மூதின் மறம்.)

தன்படை போர் செய்கின்றமை கண்டு தானும் படையா ளர்க்கு முன்னே சென்று வேலாற் போர் செய்து வென்றி மிகுகின்ற வேந்தனை மாற்றோர் சூழ்ந்துழி அது கண்டு வேறோரிடத்தே பொருகின்ற தன்றானைத்தலைவனாயினுந் தனக்குத் துணைவந்த அரசனாயினும் போரைக் கைவிட்டு வந்து வேந்தனோடு பொருகின்றாரை எறிவது தார்நிலையாம்.

(எ.டு)

“வெய்யோ னெழாமுன்னம் வீங்கிருள் கையகலச் செய்யோ னொளிதிகழுஞ் செம்மற்றே-கையகன்று போர்தாங்கு மன்னன்முன்புக்குப் புகழ் வெய்யோன் றார்தாங்கி நின்ற தகை.

தார்நிலை: (ஆ)

டு

தும்பை வேந்தனுக்கு ஒரு மறவன் தூசிப் படையை யானே தடுப்பேன் என்று தனது தறுகண்மையைச் சொல்லியதும் தார்நிலை என்னும் துறையாம்.