உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

(எ.டு)

இளங்குமரனார் தமிழ்வளம்

“உறுசுடர் வாளோ டொருகால் விலங்கின்

சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டாய்-எறிசுடர்வேல்

தேங்குலாம் பூந்தெரியல் தேர்வேந்தே நின்னோடு பாங்கலா மன்னர் படை.

தார் நிலை: (இ)

4

தன் மன்னனைப் பல பகை மன்னர்கள் வளைத்து நெருக்கிய பொழுது ஒரு மறவன் தனியே நின்று அவரனைவரையும் தடுத்தலும் தார்நிலை என்னும் துறையாம்.

(எ.டு)

“காலான் மயங்கிக் கதிர்மறைத்த கார்முகில்போல் வேலான்கை வேல்பட வீழ்ந்தனவே- தோலா இலைபுனை தண்டார் இறைவன் மேல்வந்த மலைபுரை யானை மறிந்து.

தானிலை:

இரண்டு மன்னர் படைகளும் போர்க்களத்தின் கண் தனது தறுகண்மையைப் புகழ்ந்து கூறுமாறு ஒரு மறவன் சிறப்பு எய்தியது தானிலை என்னும் துறையாம்.

(எ.டு)

"நேரார் படையின் நிலைமை நெடுந்தகை

ஓரான் உறைகழியான் ஒள்வாளும்- தேரார்க்கும்

வெம்பரிமா ஊர்ந்தார்க்கும் வெல்களிற்றின் மேலார்க்கும் கம்பமா நின்றான் களத்து.”

தானை மறம்: (அ)

போர் செய்தற் கெதிர்ந்த இருவகைப் படைகளும் தம்முள் ஒத்த ஆற்றலுடைமை காரணமாகப் போர் செய்து மடியாமல் விலக்கியது தானைமறம் என்னும் துறையாம்.

(எ.டு)

“கழுதார் பறந்தலைக் கண்ணுற்றுத் தம்முள்

இழுதார்வேற் றானை இகலிற்-பழுதாம்