உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

செயிர்காவல் பூண்டொழுகுஞ் செங்கோலார் செல்வம் உயிர்காவல் என்னும் உரை.

தானைமறம்: (ஆ)

99

அரசனுக்கு உறுதி கூறிப் போர் தானைமறம் என்னும் துறையாம்.

(எ.டு)

“வயிர்மேல் வளைஞரல வைவேலும் வாளும் செயிர்மேற் கனவிழிப்பக் சீறி-உயிர்மேற் பலகழியு மேனும் பரிமான்தேர் மன்னர்க்கு உலகழியும் ஓர்த்துச் செயின்.'

தானைமறம்: (இ)

277

செய்வித்தலும்

தும்பை யரசனது வேற்படையின் வன்மையை விதந்து சொல்லிப்பகைவரது அழிவிற்கு இரங்குதலும் தானைமறம் என் னும் துறையாம்.

(எ.டு)

"மின்னார் சினஞ்சொரிவேல் மீளிக் கடற்றானை ஒன்னார் நடுங்க உலாய்நிமிரின்-என்னாங்கொல் ஆழித்தேர் வெல்புரவி அண்ணல் மதயானைப் பாழித்தோள் மன்னர் படை.

திறை கொண்டு பெயர்தல்:

உழிஞையரசன் நொச்சியான் பணிந்து கொடுத்த திறைப் பொருளைப் பெற்று மீளுதல் திறை கொண்டு பெயர்தல் என்னும் துறையாம்.

(எ.டு)

"கோடும் வயிரும் இசைப்பக் குழுமிளை

ஓடெரி வேய உடன்றுலாய்ப்-பாடி

உயர்ந்தோங் கரணகத் தொன்னார் பணியப்

பெயர்ந்தான் பெருந்தகையி னான்.