உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

இளங்குமரனார் தமிழ்வளம்

4

துடிநிலை:

மறவர், வழிமுறை வழிமுறையாக மறக்குடிக்குத் துடி கொட்டுபவரது குணத்தைப் பாராட்டிக் கூறியது துடிநிலை என்னுந் துறையாம்.

(எ.டு)

66

'முந்தை முதல்வர் துடியர் இவன்முதல்வர் எந்தைக்குத் தந்தை யிவனெனக்கு-வந்த குடியொடு கோடா மரபினோற் கின்னும் வடியுறு தீந்தேறல் வாக்கு.

துணிவு:

وو

ஐயுறப்பட்ட தலைவியைப் பெரிய நிலவுலகத்திலே நடக்கும் காதலையுடைய மானிட மகளே ஆவாள் இவள் என்று தெளிந்து சொல்லியது துணிவு என்னும் துறையாம்.

(எ.டு)

“திருநுதல் வேரரும்பத் தேங்கோதை வாடும் இருநிலம் சேவடியும் தோயும் - அரிபரந்த போகிதழ் உண்கணும் இமைக்கும்

ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே.”

தும்பை அரவம்:

போர் கருதித் தும்பை சூடிய மன்னன் தன் படை வீரர்களின் வரிசை யறிந்து பரிசு நல்குதல் தும்பை அரவம் என்னும் துறையாம்.

(எ.டு)

“வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும்

கொல்களிறு மாவும் கொடுத்தளித்தான்- பல்புரவி

நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப்

பன்மணிப் பூணான் படைக்கு.

தும்பையின் இலக்கணம்:

'தும்பை' என்னும் புறத்திணை, நெய்தல் என்னும் அகத் திணைக்குப் புறனாகும். அது தன்னுடைய வலிமையே பொரு