உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

279

ளாகக் காண்டு, வந்த அரசனை எதிர்த்து, அவனுடைய வலிமையினை அழித்த சிறப்பினை யுடையதாம்.

தும்பைத் திணை:

பகையரசருடன் போர் செய்தலை எண்ணித் தும்பையாகிய போர்ப் பூவைத் தலையில் சூடியது தும்பை என்னும் திணையாம். (எ.டு)

“கார்கருதி நின்றதிரும் கௌவை விழுப்பணையான்

சோர்குருதி சூழா நிலநனைப்பப்- போர்கருதித்

துப்புடைத் தும்பை மலைந்தான் துகளறுசீர்

வெப்புடைத் தானையெம் வேந்து.’

தும்பையின் சிறப்பியல்பு:

99

பகைவரால் எறியப்பட்ட அம்பும் வேலும் ஒன்றன்மேல் ஒன்றாக வந்து பாய்ந்ததால் உயிர் பே பாகிய மறவனின் உடலானது, தனது மறப்பண்பினால் பூமியின்கண் வீழ்ந்து படாது, அட்டையானது (நீர்வாழி சாதி) தனது உடல் இரண்டு கூறுபட்ட விடத்தும் இயங்குமாறு போல நின்று கொண்டு ஆடியதும் இத்தும்பைத் திணையின் இலக்கணமாகும்.

(எ.டு)

“நெடுவேல் பயந்த மார்பின்

மடல்வன் போந்தையி னிற்கு மோற்கு”

“எய் போற் கிடந்தா னென்னேறு”

66

(புறம் 297)

(புறப்பொருள் வெண்பாமாலை -176)

என வருவன கணையும் வேலும் மொய்த்து நின்றன.

“வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச்

சான்றுரைப்ப போன்றன தங்குறை-மான்றோர்மேல்

வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப்

பாய்ந்தன மேன்மேற் பல

துயரவற்குரைத்தல்:

தலைவி, மாலைக் காலத்தே ஆற்றாது வருந்துதலைத் தோழி தலைவனுக்குச் சொல்லியது துயரவற்குரைத்தல் என்னும் துறையாம்.