உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

281

தூதிடை யாடல்:

மாலைக் காலத்தில் தலைவியுற்ற துன்பத்தைக் கண்டு, அத்தலைவியைப் பிரியாதவளாகிய தோழி தலைவியைத் தனியே விட்டுத் தலைவன்பால் தூதாகி நடந்தது தூதிடை யாடல் என்னும் துறையாம்.

(எ.டு)

“வள்வாய்ந்து பண்ணுக திண்தேர் வடிக்கண்ணாள்

ஒள்வாள்போல் மாலை உயல்வேண்டும்-கள்வாய தாதொடு வண்டிமிரும் தாம வரைமார்ப

தூதொடு வந்தேன் தொழ.’

தேர்மறம்:

99

தும்பை வேந்தனுடைய தேரின் நன்மையைச் சொல்லியது

தேர்மறம் என்னும் துறையாம்.

(எ.டு)

"செருமலி வெங்களத்துச் செங்குருதி வெள்ளம் அருமுரண் ஆழி தொடர-வருமரோ

கட்டார் கமழ்தெரியற் காவலன் காமர்தேர் ஒட்டார் புறத்தின்மேல் ஊர்ந்து.”

தேர்முல்லை:

சினந்து வந்த பகைவரது பகைத்தன்மையையடக்கி அவர் களது தேர்கள் பலவற்றையும் வென்று மீண்டு வரும் தலைவரது தேர் வருகையைக் கூறியது தேர்முல்லை என்னும் துறையாம். (எ.டு)

“தீர்ந்து வணங்கித் திறையளப்பத் தெம்முனையுள்

ஊர்ந்துநம் கேள்வர் உழைவந்தார்-சார்ந்து பரிகோட்டம் இன்றிப் பதவார்ந் துகளும் திரிகோட்ட மாவிரியத் தேர்.’

தொகைநிலை: (அ)

தமது புகழினை உலகில் பொன்றாது நிலை நிறுத்திப் போரிட்ட இருபெருவேந்தரும் அவரது படைகளும் ஒருவர்க் கொருவர் தோலாது போர் செய்து எல்லோரும் பட்டது தொகை நிலை என்னும் துறையாம்.