உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

(எ.டு)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

"மண்டமர்த் திண்தோள் மறங்கடைஇ மண்புலம்பக்

கண்திரள்வேல் மன்னர் களம்பட்டார்-பெண்டிர் கடிதெழு செந்தீக் கழுமினார் இன்னும் கொடிதேகாண் ஆர்ந்தின்று கூற்று.'

தொகைநிலை: (ஆ)

வாளுக்கு நீராட்டிய பின்னர், வென்றவன் படைகட்கெல் லாம் சிறப்புச் செய்தற் பொருட்டு ஒருங்கு வருக எனத் தொகுத்தலும் தொகை நிலையாம்.

(எ.டு)

“கதிர்சுருக்கி யப்புறம்போங் காய்கதிர்போல் வேந்தை யெதிர் சுருக்கி யேந்தெயில்பா ழாக்கிப்-பதியிற் பெயர்வான் றொகுத்த படைத்துகளாற் பின்னு முயர்வான் குறித்த துலகு

தொகை நிலை: (இ)

ஓர் அரசனுடைய மதிலை முற்றிக் கைப்பற்றிய உழிஞை மன்னன் அடியினை அவனது ஏனைப் பகை மன்னர் எல்லாம் அஞ்சி வந்து தஞ்சம் புகுதலும் தொகை நிலை என்னும் துறையாம்.

(எ.டு)

6

"நாவற் பெயரிய ஞாலத் தடியடைந்து

ஏவ லெதிரா திகல்புரிந்த - காவலர்

வின்னின்ற தானை விறல்வெய்யோற் கம்மதிலின்

முன்னின் றவிந்தார் முரண்.”

தொடாக்காஞ்சி: (அ)

ஒரு காஞ்சி மறவனுடைய விழுப்புண்ணைத் தீண்டுதற்குச் சென்ற தொரு பேய் தீண்ட அஞ்சி மீண்டது தொடாக் காஞ்சி என்னுந்துறையாம்.

(எ.டு)

“ஐயவி சிந்தி நறைபுகைத் தாய்மலர்தூய்க் கொய்யாக் குறிஞ்சி பலபாடி-மொய்யிணர்ப்