உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

283

பூப்பெய் தெரியல் நெடுந்தகைபுண் யாங்காப்பப் பேய்ப்பெண் பெயரும் வரும்

தொடாக் காஞ்சி: (ஆ)

இன்பம் தரவல்ல நகை பொருந்திய மனைவி புண் பட்டுக் கிடக்குந் தன் கணவனைப் பேய்கள் நெருங்காதவாறு காப்பது தொடாக் காஞ்சியாகும்.

(எ.டு)

“தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்கு மருப்பி யாழொடு பல்லியங் கறங்கப் பையப் பெயர்த்து மைவிழு திழுகி

யையவி சிதறி யாம்ப லூதி

யிசைமணி யெறிந்து காஞ்சி பாடி

நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்

காக்கம் வம்மோ காதலந் தோழி

வேந்துறு விழுமந் தாங்கிய

பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே”

தொட்ட காஞ்சி:

இல்லின்கண் பாதுகாக்கப்படும் மறவனது விழுப்புண்ணைப் பேய்மகள் தீண்டியது தொட்ட காஞ்சி என்னுந்துறையாம்.

(எ.டு)

“கொன்றுருத்த கூர்வே லவற்குறுகிக் கூரிருள்வாய் நின்றுருத்த நோக்கி நெருப்புமிழாச்- சென்றொருத்தி ஒட்டார் படையிடந்த ஆறாப்புண் ஏந்தகலம்

தொட்டாள் பெருகத் துயில்.'

தோலின் பெருக்கம்:

பகைவரது மதின்மேல் சென்றுழி மதிலகத்தோரால் எறியப் படுகின்ற அம்புமுதலியவற்றைத் தடுத்தற்குரிய கிடுகு கேடயம் முதலிய படைக்கருவிகளின் மிகுதியைக் கூறுவது தோலின் பெருக்கம்.