உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

பவர்முல்லை தோன்றி பரியாமல் ஈன்ற

அவர்வருங் காலமீ தன்று.”

பள்ளிமிசைத் தொடர்தல்:

295

இரவில் தலைவி உறக்கத்தை ஒழித்துத் தலைவனை அவனது படுக்கையிலேயே பற்றிக் கொண்டது பள்ளிமிசைத் தொடர்தல் என்னும் துறையாம்.

(எ.டு)

"யானை தொடரும் கொடிபோல யானுன்னைத் தானை தொடரவும் போதியோ-மானை

மயக்கரிய உண்கண் மடந்தைதோள் உள்ளி இயக்கருஞ் சோலை இரா.'

பாசறை நிலை:

99

வஞ்சி சூடிச் சென்ற மன்னன் தனக்குப் பகைவர் பணிந்த பின்னும் மீளானாய்ப் பாசறையிடத்தே தங்கியது பாசறை நிலை என்னும் துறையாம்.

(எ.டு)

“கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப்

பெரும்புனல் வாய்திறந்த பின்னும்- சுரும்பின் தொகைமலிந்த தண்குவளைத் தூமலர்த் தாரான் பகைமெலியப் பாசறையு ளான்.

பாசி நிலை:

மதிலைக் கொண்ட புறத்தோனும் மதிலைக்காத்த அகத் தோனும் அகழியின் இருகரை மதிலிலும் நின்று கொண்டு தண்ணீர்க் கண் பாசி போற்கிடங் கினிடத்துப் போரிடுவது பாசி நிலையாகும்.

(61.6)

“பொலஞ்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய் நிலந்திடர் பட்டதின் றாயிற்- கலங்கமர்மேல் வேத்தமர் செய்யுங் விரகென்னாம் வேன்மறவர் நீத்துநீர்ப் பாய்புலிபோ னின்று”