உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

(எ.டு)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“வெல்புரவி பூண்ட விளங்கு மணித்திண்டேர்

நல்கிய பின்னும் நனிநீடப்- பல்போர்

விலங்கும் கடல்தானை வேற்றார் முனைபோல் கலங்கும் அளித்தென் கடும்பு.

பரிசில் விடை:

99

உள்ளம் மகிழுமாறு தனது வெற்றியைப் புகழ்ந்து பாடிய பரிசிலர்க்கு அரசன் அரசன் பரிசிற் பொருளை வழங்கி அவர் இன்புறுமாறு விடை கொடுத்தது பரிசில் விடை என்னும் துறையாம்.

(எ.டு)

“படைநவின்ற பல்களிறும் பண்ணமைந்த தேரும் நடைநவின்ற பாய்மாவும் நல்கிக்- கடையிறந்து முன்வந்த மன்னர் முடிவணங்குஞ் சேவடியாற் பின்வந்தான் பேரருளி னான்.'

பருவமயங்கல்: அ.

தலைவியின் ஆற்றாமை கண்டு தோழி காலத்தை ஐயுற்றுத் துன்பம் அடைந்தது பருவமயங்கல் என்னும் துறையாம்.

(எ.டு)

“பெரும்பணை மென்தோள் பிரிந்தாரெம் முள்ளி

வரும்பருவம் அன்றுகொல் ஆங்கொல்- சுரும்பிமிரும் பூமலி கொன்றை புறவெல்லாம் பொன்மலரும் மாமயிலும் ஆலும் மலை.

பருவமயங்கல்: ஆ.

தலைவி, தலைவன் குறித்த பருவம் நிகழ்ந்தும் அப்பருவம் அன்றெனத் தெளிதலும் பருவமயங்கல் என்னும் துறையாம். (எ.டு)

"பொறிமயில் ஆலின பொங்கர் எழிலி

சிறுதுவலை சிந்தின சிந்த- நறிய