உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

"மாணலங் கொள்ளும் மகிழ்நன் தணக்குமேற் பேணலம் பெண்மை ஒழிகென்பார்- காணக் கலவ மயிலன்ன காரிகையார் சேரி வலவன் நெடுந்தேர் வரும்.”

பரிசில் கடா நிலை:

293

பரிசில் பெற்ற பின் அவனும் அவன் கொடுத்த பெருவளனை உயர்த்துக் கூறி உலக வழக்கியலால் தோன்றும் இரண்டு வகைப் பட்ட விடையாம். இருவகை விடையாவது, தலைவன் தானே விடுத்தலும், பரிசிலன் தானே போகல் வேண்டும் எனக்கூறி விடுத்தலுமாம்.

(எ.டு)

“தென்பரதவர் மிடல்சாய

வட வடுகர் வாளோட்டிய”

என்று தொடங்கும் புறப்பாடல் (378) இது தானே போவென டுத்தபின், அவன் கொடுத்த பெருவளனை உயர்த்திக் கூறியது.

பரிசில் துறை:

மாநிலம் காக்கும் மன்னவன்முன்னே சென்று இரவலன் தான் பெறக்கருதிய பொருள் இஃதெனக் கூறியது பரிசில்துறை என்னும் துறையாம்.

(எ.டு)

“வரிசை கருதாது வான்போல் தடக்கைக் குரிசில்நீ நல்கயாம் கொள்ளும்- பரிசில்

அடுகளம் ஆர்ப்ப அமரோட்டித் தந்த படுகளி நால்வாய்ப் பகடு.

பரிசில் நிலை:

பரிசிலரை நீங்குத லமையாது நெடிது கொண்டொழுகிய தலைவற்குப் பரிசில் வேட்டோன் தன் கடும்பினது இடும்பை கூறித் தான் பெறக் கருதிய பொருளினைப் பெற்றுப் போகத் துணிந்தது பரிசில் நிலை என்னும் துறையாம்.