உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பயந்தோர்ப் பழிச்சல்:

இம்மடந்தையைப் பெற்று வளர்த்தோர் நெடுங்காலம் வாழ்க என்று கூறி அத்தலைவியின் இருமுது குரவரைப் பாராட்டியது பயந்தோர்ப் பழிச்சல் என்னும் துறையாம்.

(எ.டு)

“கல்லருவி ஆடிக் கருங்களிறு காரதிரும்

மல்லலஞ் சாரல் மயிலன்ன- சில்வளைப் பலவொளி கூந்தலைப் பயந்தோர் நிலவரை மலியநீடு வா ழிய ரே.'

பரத்தை கூறல்:

பாங்காயினார் கேட்பப் பரத்தை தலைவன் வன் மாலை பெறுதல் எமக் கெளிதென்று கூறியது பரத்தை கூறல் என்னும் துறையாம்.

(எ.டு)

66

‘பலவுரைத்துக் கூத்தாடிப் பல்வய லூரன் நிலவுரைக்கும் பூணவர் சேரிச் செலவுரைத்து வெங்கட் களியால் விறலி விழாக்கொள்ளல் எங்கட் கவன்தார் எளிது.”

பரத்தையை ஏசல்:

மருத நிலத்தூரையுடைய தலைவனோடு நீர் விளையாட் டினை விரும்பும் மெல்லிய சொல்லினையுடைய தலைவி பரத் தையை ஏசியது பரத்தையை ஏசல் என்னும் துறையாம்.

(எ.டு)

"யாமுயங்கு மென்முலையால் யாணர் வயலூரன்

தேமுயங்கு பைந்தார் திரைமுயங்க -யாமுயங்க எவ்வையர் சேரி இரவும் இமைபொருந்தாக் கவ்வை கருதிற் கடை.

பரத்தை வாயில் பாங்கி கண்டுரைத்தல்:

உன் தலைவி சொல் வீணாகுமாறு தலைவன் எம் இல்லிற்கு வருவான் என்று சேரிப்பரத்தையின் தோழி, இற்பரத்தையின் தோழிக்குச் சொல்லியது.