உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

"வெவ்வாய் மறவர் மிலைச்சிய வெட்சியாற்

செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றா- ரெவ்வாயு மார்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ

போர்க்குந் துடியொடு புக்கு'

படை வழக்கு: (அ)

291

அரசன் படைக்கலம் வழங்கிய பின்னர் வீரக்கழலை யுடைய மறவர் தமது மறப்பண்பினை விதந்து கூறுதல் படை வழக்கு என்னுந்துறையாம்.

(எ.டு)

"துன்னருந் துப்பின் தொடுகழலார் சூழ்ந்திருப்பத் தன்னமர் ஒள்வாளென் கைத்தந்தான்- மன்னற்கு மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ் விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து."

படை வழக்கு: (ஆ)

காஞ்சி மன்னன் தம்மில் இனமொத்த போர் மறவருக்குப் போர்க் கருவிகளை வழங்கியதும் படைவழக்கு என்னுந்துறையாம்.

(எ.டு)

66

'ஐயங் களைந்திட்டடல் வெங்கூற் றாலிப்ப

ஐயிலை எஃக மவைபலவும்- மொய்யிடை

ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான் வாட்குடி வன்க ணவர்க்கு

படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமம்:

கையில் உள்ள படைக்கருவிகள் தீர்ந்தவிடத்து, மெய்யினா லேயே போர் செய்து வெற்றியடைதலாம்.

(எ.டு)

"கொல்லேறு பாய்ந்தழிந்த கோடுபோற் றண்டிறுத்து மல்லேறு தோள்வீமன் மாமனைப்- புல்லிக்கொண் டாறாத போர்மலைந் தங்கரசர் கண்டார்த்தா ரேறாட லாய ரென”