உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

நொச்சித்திணை:

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தமது அரணைப் பாதுகாத்தற் பொருட்டு அவ்வரணகத்துள்ள அரசன் நொச்சிப் பூவைச் சூடி அதைப் பாதுகாத்தல் நொச்சித் திணையாம்.

(6.6)

“ஆடரவம் பூண்டான் அழலுணச் சீறிய கூடரணங் காப்போர் குழாம்புரையச்-சூடினார் உச்சி மதிவழங்கும் ஓங்கு மதில்காப்பான் நொச்சி நுதிவே லவர்’

பகட்டுமுல்லை:

வேளாண் தலைவனை உழைப்பாலும் சுமை பொறுத்த லானும் அவனுடைய எருதோடு உவமித்துக் கூறியது பகட்டு முல்லை என்னும் துறையாம்.

(எ.டு)

“உய்த்தல் பொறுத்தல் ஒழிவின் றொலிவயலுள்

எய்த்தல் அறியா திடையின்றி-வைத்த

படுநுகம் பூண்ட பகட்டொடு மானும்

நெடுமொழி எங்கணவன் நேர்.'

பகல் முனிவுரைத்தல்:

وو

ாம் முறை

மிக்க

தலைவனைப் புணர்தல் நிமித்தம் இரண்ட காணுதற்கு உறுதி கொண்ட தலைவி, துன்பம் நெஞ்சுடையளாய்ப் பகற்பொழுதை வெறுத்துக் கூறியதனைக் கூறுவது பகல் முனிவுரைத்தல் என்னும் துறையாம்.

(61.6)

66

தன்கண் அளியவாய் நின்றேற்குத் தார்விடலை வன்கண் நல்கான் எனவாடும்- என் கண்

இடரினும் பெரிதால் எவ்வம்

படரினும் பெரிதாற் பாவியிப் பகலே.

படை இயங்கு அரவம்:

பசுக் கூட்டங்களைக் கவர்தற்கு எழுந்த படை பாசறைப் புறத்துப் பொருந்தும் பேரொலியும், நிரைமீட்டற்கு எழுந்த படை விரைந்து செல்லும் பேரொலியுமாம்.