உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

289

“போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்

கார்க்கடல் பெற்ற கரையன்றோ- போர்க் கெல்லாந் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே ரேனாதிப் பட்டத் திவன்”

நெடு மொழி கூறல்: (ஆ)

கரந்தை மறவன் ஒருவன் தன் அரசனுக்குத் தனது வீரத்தின் சிறப்பைத் தானே எடுத்துக் கூறியது நெடுமொழி கூறல் என்னும் துறையாம்.

(எ.டு)

"ஆளமர் வெள்ளம் பெருகின் அதுவிலக்கி வாளொடு வைகுவேன் யானாக-நாளும் கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோய் ஈயப் பிழிமகிழ் உண்பார் பிறர்."

நெடு மொழி கூறல்: (இ)

தன்னிடத்தில் உள்ள போர்த்தொழிலின் முயற்சியாலே

வஞ்சினங்களைத் தன்னோடு கூட்டிக் கூறுதல்.

(எ.டு)

“தானால் விலங்காற் றனித்தாற் பிறன்வரைத்தால்

մ

யானை யெறித லிளிவரவால் யானை

யொருகை யுடைய தெறிவலோ யானு

மிருகை சுமந்துவாழ் வேன்”

நெடுமொழி வஞ்சி:

ஒரு மறவன் தன் பகைவர் படையை நெருங்கித் தனது ஆண்மைத் தன்மையைத் தானே உயர்த்திச் சொல்லியது நெடு மொழிவஞ்சி என்னுந் துறையாம்.

(எ.டு)

66

“இன்னா ரெனவேண்டா என்னோ டெதிர்சீறி

முன்னர் வருக முரணகலும்-மன்னர்

பருந்தார் படையமருட் பல்லார் புகழ

விருந்தா யடைகுறுவார் விண்”