உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

நூழில் ஆட்டு:

இளங்குமரனார் தமிழ்வளம்

4

தும்பை மறவன் ஒருவன் தனது மார்பைப் பிளந்த பகைவர் வேலினைப் பறித்து அப்பகைவர் படை இரிந்தோட எறிந்தது நூழிலாட்டு என்னும் துறையாம்.

(எ.டு)

“மொய்யகத்து மன்னர் முரணினி என்னாங்கொல்

கையகத்துக் கொண்டான் கழல்விடலை

விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த படுசுடர் எஃகம் பறித்து."

நெஞ்சொடு மெலிதல்: (அ)

வெய்ய

தலைவி இரவின்கண் இருள் நெறியில் தலைவன் இருக் கைக்குச் செல்லக் கருதி தனது மனத்தின்கண் விரும்பிய நிலையைச் சொல்லியது நெஞ்சொடு மெலிதல் என்னுந் துறையாம்.

(எ.டு)

"மல்லாடு தோளான் அளியவாய் மாலிருட்கண் செல்லாம் ஒழிக செலவென்பாய்-நில்லாய் புனையிழை யிழந்த பூசல்

நினையினு நினைதியோ வாழியென் நெஞ்சே.”

நெஞ்சொடுமெலிதல்: (ஆ)

எனது தலைவன்பாற் செல்லத் துணிந்தேன். இதனை மகளி ரெல்லாம் அறிக என்று தலைவி கூறினும் நெஞ்சொடு மெலிதல் என்னுந் துறையாம்.

(எ.டு)

“நல்வளை ஏக நலந்தொலைவு காட்டிய

செல்லல் வலித்தேனச் செம்மன்முன்- பில்லாத

வம்ப உரையொடு முயங்கிய

அம்பற் பெண்டிரும் அறைகஎம் அலரே.”

நெடுமொழி: (அ)

வேந்தனால் ஏனாதி, காவிதி முதலிய பட்டங்களும், நாடும், ஊரும் பெற்றகாரணத்தால், தானே யாயினும் பிறரேயானும் கூறும் மீக்கூற்றுச்சொல்.