உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

“வாளமர் வீழ்ந்த மறவோன்க லீர்த்தொழுக்கிக் கேளி ரடையக் கிளர்ந்தெழுந்து - நீள்விசும்பிற் கார்ப்படுத்த வல்லேறு போலக் கழலோன்க னீர்ப்படுத்தார் கண்ணீரி னின்று”

இஃது நீர்ப் படை

“பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன் கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை வான்வழங்கு நீரினுந் தூய்தே யதனாற் கண்ணீ ரருவியுங் கழீஇத்

தெண்ணீ ராடுமின் றீர்த்தமா மதுவே”

இது கல்நாட்டியபின் நீராட்டியது.

நூழில்: (அ)

287

தன் தலைவன் வஞ்சகத்தால் கொலையுண்டான் என்று எண்ணிய மறவன், அறம் நோக்காது பலரை வெட்டிக் குவித்தல் நூழில் என்னுந்துறையாம்.

(எ.டு)

66

'வள்ளை நீக்கி வயமின் முகந்து

கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்

வேழப் பழனத்து நூழிலாட்டு"

நூழில்: (ஆ)

தும்பை மறவன் ஒருவன்

பகைமன்னர் படை

யைக்

கொன்று தனது வேலைத் திரித்து ஆடியதும் நூழில் என்னும் துறையாம்.

(எ.டு)

66

“ஆடல் அமர்ந்தான் அமர்வெய்யோன் வீழ்குடற்

சூடல் மலிந்த சுழல்கண்பேய்- மீடல்

மறந்தவேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம்

திறந்தவேல் கையில் திரித்து.

99