உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

(எ.டு)

66

இளங்குமரனார் தமிழ்வளம்

4

எண்ணின் இடரெட்டும் இன்றி வயற்செந்நெற் கண்ணின் மலரக் கருநீலம் - விண்ணின் வகைத்தாய் வளனொடு வைகின்று வென்வேல் நகைத்தாரான் தான்விரும்பு நாடு.

இடர் எட்டு : "விட்டில் கிளி நால்வாய் வேற்றரசு, தன்னரசு, நட்டம், பெரும் பெயல் காற்று”

நாண்முல்லை:

கணவனைப் பிரிந்தாளொருத்தி, தனது நாணே காவலாக வறுமனையிடத்திருந்து தன் கற்புடைமையைக் காத்துக் கொண்டது நாண்முல்லை என்னுந் துறையாம்.

(எ.டு)

“கொய்தார மார்பிற் கொழுநன் தணந்தபின் பெய்வளை யாட்குப் பிறிதில்லை- வெய்ய வளிமறையும் இன்றி வழக்கொழியா வாயில் நளிமனைக்கு நற்றுணை நாண்.

நாள்மங்கலம்:

அறத்தை உண்டாக்கும் செங்கோன்மையையும் அருளையும் விரும்பும் அரசன் பிறந்தநாளினது நன்மையைச் சொல்லியது நாள் மங்கலம் என்னும் துறையாம்.

(6.6)

66

'கரும்பகடும் செம்பொன்னும் வெள்ளணிநாட் பெற்றார்

விரும்பி மகிழ்தல் வியப்போ- சுரும்பிமிர்தார்

வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள்விழைந்து தம்மதில் தாம்திறப்பர் தாள்.

நீர்ப்படை:

நீர்ப்படையாவது நடுகல் நாட்டுதற்குரிய கல்லைக் கண்ட பின் அதனைக் கொண்டு வந்து நன்னீரால் தூய்மை செய்தலும், பின்னர்ப் பெயரும் பீடும் எழுதி நாட்டிய வழித்தூய்மை செய்தலும் என இருவகைப்படும்.