உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

மலைமலிந் தன்ன மார்பம்

முலைமலிந் தூழூழ் முயங்குங் காலே.”

நயப்புற்றிரங்கல்:

285

தலைவியின் புணர்ச்சியின்பத்தைப் பெரிதும் விரும்பிய தலைவன் சொல்லெதிர் பெறாமையின் அவளைப் பெரிதும் புகழ்ந்து நயப்புற்றிரங்கல் என்னுந் துறையாம்.

(எ.டு)

“பெருமட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க்

கருமழைக்கண் வெண்முறுவல் பேதை- திருமுலை

புல்லும் பொறியி லேனுழை

நில்லா தோடுமென் நிறையில் நெஞ்சே.”

நல்லிசை நிலை:

போர்க்களத்துத் தன் தலைவன் பகைவரின் வஞ்சகத்தால் கால்லப்பட்டான் என்றுசினந்து, பெரும்படைத் தலைவன் தலைமயங்கிப் பொருத நல்ல நிலைமையைக் கூறுவது நல்லிசை நிலையாகும்.

நலம் பாராட்டல்:

காமத்துன்பம்

பெருக

அணிகலன்களையுடை

அத்தலைவியினது அழகைத்தலைவன் கொண்டாடியது நலம்

பாராட்டல் என்னுந் துறையாம்.

(எ.டு)

“அம்மென் கிளவி கிளிபயில ஆயிழை

கொம்மை வரிமுலை கோங்கரும்பு-இம் மலை நறும்பூஞ் சாரல் ஆங்கண்

குறுஞ்சுனை மலர்ந்தன தடம்பெருங் கண்ணே."

நாடு வாழ்த்து:

முழந்தாளின் கீழேயும் நீண்டு தாழ்ந்த பெரிய கையினை யுடைய மன்னனது நாட்டின் வளத்தைக் கூறியது நாடு வாழ்த்து என்னும் துறையாம்.