உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

கூறப்பட்ட இவற்றை ஆராய்ந்து கூறுவது

297

பாடாண்

திணையாம். அஃதாவது பாடப் படுகின்ற ஆண்மகனது இயல்புகளைத் தொகுத்துக் கூறுவது.

(6.6)

“மன்னர் மடங்கல் மறையவர் சொல்மாலை அன்ன நடையினார்க் காரமுதம்- துன்னும் பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தார் எரிசினவேல் தானையெங் கோ.”

பாணாற்றுப்படை:

பரிசில் பெற்று வருகின்ற பாணன் மலைவழியிடத்தே தன் எதிர்வரும் பாணனைப் பரிசில் பெறும் வழியிலே செலுத்தியது பாணாற்றுப் படை என்னும் துறையாம்.

(எ.டு)

“இன்றொடை நல்லிசை யாழ்ப்பாண எம்மைப்போற் கன்றுடை வேழத்த கான்கடந்து- சென்றடையிற் காமரு சாயலாள் கேள்வன் கயமலராத் தாமரை சென்னி தரும்.

பாண்பாட்டு:

பாணர், போர்க் களத்தே பட்ட மறவர் தம் உடலைத் தீப் பெய்து அவருடைய புகழைத் தம் யாழினோடிசைத்துப் பாடுதல் பாண்பாட்டு என்னும் துறையாம்.

(எ.டு)

“தளரியல் தாய்புதல்வர் தாமுண ராமைக் களரிக் கனல்முழங்க மூட்டி- விளரிப்பண் கண்ணினார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்க்கு விண்ணினார் செய்தார் விருந்து.”

பாண் வரவுரைத்தல்:

தோழி தலைவனுடைய பாணன் வரவினைத் தலைவிக்கு உணர்த்தியது பாண் வரவுரைத்தல் என்னும் துறையாம்.