உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

(எ.டு)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“அஞ்சொற் பெரும்பணைத்தோள் ஆயிழையாய் தாம்கொடியும் வஞ்சம் தெரியா மருள்மாலை-எஞ்சேரிப்

பண்ணியல் யாழொடு பாணனார் வந்தாரால்

எண்ணிய தென்கொலோ ஈங்கு.

பாப்ப்பன வாகை;

வேள்வி

மண்டபத்திடத்தே

மறைகளைக்

கேட்டுத்

மிகுத்துச்

தலைமை பெற்ற பார்ப்பனனது வெற்றியை

சொல்லியது பார்ப்பன வாகை என்னும் துறையாம்.

(எ.டு)

“ஓதங் கரைதவழ்நீர் வேலி உலகினுள்

வேதங்கரை கண்டான் வீற்றிருக்கும்- ஏதம் சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுசுடர் வேள்வி அகத்து.

பார்ப்பனமுல்லை:

வேந்தர்களின்

மாறுபாட்டை

விலக்கி

ஒற்றுமைப்

படுத்தும் பார்ப்பானின் நடுவுநிலைமையைச் சொல்லியது பார்ப்பனமுல்லை என்னும் துறையாம். பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று நிலையினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலையே நடுவு நிலைமையாகும்.

(எ.டு)

“ஒல்லெனீர் ஞாலத் துணர்வோ விழுமிதே

நல்லிசை முச்செந்தீ நான்மறையோன்- செல்லவும் வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை என்றன்றி மீண்ட திலர்.”

பாலை நிலை(புறங்காட்டு நிலை):

பாலை நிலையாவது, கற்புடைய மனைவி கணவன் இறந்து அவனோடு எரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினாரோடு உறழ்ந்து கூறுவது புறங்காட்டு நிலையாகும்.